Wednesday 11 January, 2012

வாசிப்பு!




அகம் முழுக்க 
அடர்த்தியாய் இருள்!
புழுக்கம் குறைக்க 
புத்தகம் திறக்கிறது 
மனது!

கால நெரிசலில் 
களவு கொடுத்த 
நித்திரை எல்லாம் 
மீட்டு கொடுக்கும்  ஒரே 
மாத்திரை !

குறியீட்டை ஒலியாய்,
எழுத்துகளை அர்த்தமாய்,
சிந்தைக்கு ஊட்டும் 
விந்தை! 

மூளைசுவர்களில்
திரையோவியம் 
கொட்டிவிட்டு போன 
சாயம் நீக்கும் மாயம் !

ஆட்களை  படித்தேன் 
குழப்பம் வந்தது! 
நூல்களை  படித்தேன் 
தெளிவு தந்தது!

பார்வையற்ற தோழரெல்லாம் 
பத்து விரலில் படிக்கிறார்!
பணமற்ற தோழர்கள்தாம் 
படிப்பறிவின்றி துடிக்கிறார்!

யாம் கொண்ட அச்சமெல்லாம் 
குறுஞ்செய்தி தாண்டி
வேறேதும் வாசித்தறியா 
எம் இளைய 
தலைமுறை பற்றியே! 

2 comments:

  1. வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவது பற்றி வேதனைப்படுகிறீர்கள்.சிறுவயதிலேயே கணணி தவிர்த்து புத்தகங்களை நாங்கள்தான் சின்னவர்களுக்கு வாசிக்கும்,அதன் சுவையைக் கொடுத்துப் பழக்கவேணும்.பரிசுப்பொருள் கொடுக்கும் தருணங்களில் புத்தகங்களையே பரிசாகக் கொடுங்கள்.தானாகவே வாசிக்கும் பழக்கம் வரும்.இங்கு நடக்கும்போதுகூட சிலர் வாசித்தபடி நடப்பார்கள் !

    ReplyDelete
  2. தொடர்ந்து எழுதுவேன்னு சொன்னீங்க.எங்க காணோம் !

    ReplyDelete