கதவுகளை புறக்கணியுங்கள்
திருட்டுகள் குறையலாம்!
நன்னெறி காக்கும்
முயற்சியில்,
பாவ, புண்ணிய
அளவுக்கேற்ப
செதுக்கியிருக்கிறார்கள்
சொர்க்க, நரக கதவுகளை!
அவள்
மனச்சிறையின் கதவிற்குள்
தன்னைத்தானே அடைத்துக்கொண்டு
கடவுகோள் தேடியே
காலம் தொலைக்கிறான்
அவன்!
சாமானியன் நுழைய முடியாதவை
அலங்கரிக்கப்பட்ட அரசாங்க கதவுகள் !
நாணயத்தில் செய்ததாலேயே
நாணயம் இழந்தவை!
வியர்த்து,
விறைத்து,
நனைந்து,
முக்காலமும் உணர்ந்த
முனிவர்க்கும் மனிதர்க்கும்
கண்ணில் பட்டதில்லை
காலக்கதவுகள்!
விற்கப்படாத கதவின்
விலையை நிர்ணயிக்கும்
தச்சனின் மனநிலையோடு,
இக்கவிதையை விமர்சிக்க...
வாசகன் தேடுகிறேன்
என் தளத்தின் கதவுகள்
உடைத்தெறிந்து!!!
கதவுகள் விதம் விதமாக இருந்தாலும் திறப்பதும் தாழிடுதலும் தேவைக்கேற்ப மாறுபடுகிறது.அழகிய வித்தியாசமான எண்னத்தை வெளிப்படுத்துகிறது கவிதை !
ReplyDeleteநிறையக் காலத்தின் பின் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.ஏன் இப்போது எழுதுவது மிகமிகக் குறைவாயிருக்கிறது.சுகம்தானே நீங்கள் !
வணக்கம் ஹேமா! உங்கள் வருகையில்தான் உயிர்பெறுகிறது இந்த தளம். நன்றி!
ReplyDeleteஅலுவல் தேடும் அலுவலில் மூழ்கியிருந்தேன். இனி தொடர்ந்து எழுத திட்டமிட்டுவிட்டேன். கடந்த 5 நாட்களில் 5 பதிப்புகள். எனக்கே மகிழ்ச்சியாய் இருக்கிறது. உங்கள் வார்த்தைகள் கொடுக்கும் ஊட்டம் சொல்ல இயலாதது. நன்றி மீண்டும் வருக! :)