அறுபத்தி நாலு கலையில்
ஒன்றாம்!
அரசனானாலும் அதை
பயில்தல் நன்றாம்!
கலவி இன்பத்தில்
காணும் சுகமெல்லாம்
சலிக்கும்.
சலிக்காது (இசைக்)
கருவி மீட்டலில்
காணும் சுகம்.
கண்ணீர் துடைக்க,
கவலை துறக்க,
களைப்பை மறக்க,
மனக்களிப்பை உரைக்க...
என் முன்னவன் கையில் எடுத்ததெல்லாம்,
பம்பை, உடுக்கை, உறுமி மேளமும்
குழல் முழவு சிறுபறை தாளமும் தான்.
சரஸ்வதி கையில் வீணை கொடுத்தோம்
சிவனின் சூலத்தில் உடுக்கை இணைத்தோம்
அரியின் கையில் குழலை திணித்தோம்
எம் கடவுளர்க்கும் இசையை மறவாது பயிர்த்தோம்!
எதேனும் கொடுங்கள்
உங்கள் குழந்தை கையில்!
கிட்டார், ட்ரம்ஸ், கி-போர்டு என்று...
அவர்கள் இசையின் சூழலில் வளர்தலே நன்று !
உண்மை.இசைதான்தான் வாழ்வையே அசைத்துக்கொண்டிருக்கிறது.இன்பமோ துன்பமோ தலைதடவி ஆறுதல் சொல்லும் பங்கு என் வாழ்வில் இசைக்கு மட்டுமே அதிகம்.நல்லதொரு கவிதை தோழரே !
ReplyDeleteஅருமை அன்பரே
ReplyDeleteNice
ReplyDeleteஆழ்ந்த கருத்துகளுடன் பாமரனுக்கும் புரியும்
ReplyDeleteவிதத்தில் தொடுக்கப்பட்ட அற்புதமான படைப்பு....
வாழ்க....
நன்றி...
தட்டிகொடுக்கும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !
ReplyDelete"அரிசி"என யாரை அழைக்கிறீர்கள்?..... என அறியலாமா
ReplyDelete