அகம் முழுக்க
அடர்த்தியாய் இருள்!
புழுக்கம் குறைக்க
புத்தகம் திறக்கிறது
மனது!
கால நெரிசலில்
களவு கொடுத்த
நித்திரை எல்லாம்
மீட்டு கொடுக்கும் ஒரே
மாத்திரை !
குறியீட்டை ஒலியாய்,
எழுத்துகளை அர்த்தமாய்,
சிந்தைக்கு ஊட்டும்
விந்தை!
மூளைசுவர்களில்
திரையோவியம்
கொட்டிவிட்டு போன
சாயம் நீக்கும் மாயம் !
ஆட்களை படித்தேன்
குழப்பம் வந்தது!
நூல்களை படித்தேன்
தெளிவு தந்தது!
பார்வையற்ற தோழரெல்லாம்
பத்து விரலில் படிக்கிறார்!
பணமற்ற தோழர்கள்தாம்
படிப்பறிவின்றி துடிக்கிறார்!
யாம் கொண்ட அச்சமெல்லாம்
குறுஞ்செய்தி தாண்டி
வேறேதும் வாசித்தறியா
எம் இளைய
தலைமுறை பற்றியே!
வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவது பற்றி வேதனைப்படுகிறீர்கள்.சிறுவயதிலேயே கணணி தவிர்த்து புத்தகங்களை நாங்கள்தான் சின்னவர்களுக்கு வாசிக்கும்,அதன் சுவையைக் கொடுத்துப் பழக்கவேணும்.பரிசுப்பொருள் கொடுக்கும் தருணங்களில் புத்தகங்களையே பரிசாகக் கொடுங்கள்.தானாகவே வாசிக்கும் பழக்கம் வரும்.இங்கு நடக்கும்போதுகூட சிலர் வாசித்தபடி நடப்பார்கள் !
ReplyDeleteதொடர்ந்து எழுதுவேன்னு சொன்னீங்க.எங்க காணோம் !
ReplyDelete