அகம் முழுக்க
அடர்த்தியாய் இருள்!
புழுக்கம் குறைக்க
புத்தகம் திறக்கிறது
மனது!
கால நெரிசலில்
களவு கொடுத்த
நித்திரை எல்லாம்
மீட்டு கொடுக்கும் ஒரே
மாத்திரை !
குறியீட்டை ஒலியாய்,
எழுத்துகளை அர்த்தமாய்,
சிந்தைக்கு ஊட்டும்
விந்தை!
மூளைசுவர்களில்
திரையோவியம்
கொட்டிவிட்டு போன
சாயம் நீக்கும் மாயம் !
ஆட்களை படித்தேன்
குழப்பம் வந்தது!
நூல்களை படித்தேன்
தெளிவு தந்தது!
பார்வையற்ற தோழரெல்லாம்
பத்து விரலில் படிக்கிறார்!
பணமற்ற தோழர்கள்தாம்
படிப்பறிவின்றி துடிக்கிறார்!
யாம் கொண்ட அச்சமெல்லாம்
குறுஞ்செய்தி தாண்டி
வேறேதும் வாசித்தறியா
எம் இளைய
தலைமுறை பற்றியே!