
முகமூடிகளால்
ஆகிப் போனது
இந்த
வாழ்க்கை!
அசட்டு சிரிப்புகளில்
தொடங்கி,
அழுகாச்சி வரை
வித விதமாய்
கழட்டி,
மாட்டி கொள்கிறார்கள்
முகமூடிகளை!!
சுட்டாலும்
வெண்மை தரும்
சங்குகளில்
செய்யப்பட்டிருக்கிறது
முகமூடிகள்!
முகங்களை
முற்றிலுமாய்
மறைப்பதற்காய்....
நிஜமான
முகங்கள்
தூரப்பட்டாயிற்று!
அதன்
பிம்பங்களை
பார்த்திராது
போயின....
எம்
கண்ணாடிகள்!
எல்லோருக்கும்
பிடிக்கும் படியான,
முகமூடியொன்று,
செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது!
எனக்காக....
அதுவரை
என்
முகத்தை, நீங்கள்
தாராளமாய்
வெறுக்கலாம்!!!
Neththiyadi... Very nice machi...
ReplyDeleteAntha mathiri MUKAMOODI-i kantu pidithal enakum antha ragasiyathai sol nanba... thedi thedi aluthu poi vitatha...
//அதுவரை
ReplyDeleteஎன்
முகத்தை, நீங்கள்
தாராளமாய்
வெறுக்கலாம்!!! //
Good one!
-ப்ரியமுடன்
சேரல்
நன்றி சேரல்....
ReplyDeleteஉங்கள் வார்த்தைகள் தந்த உற்சாகம், இன்னும் நல்ல கவிதைகளை எழுதத் தூண்டுகிறது.....
-தாமோதரன்