Tuesday, 8 December 2009

சொக்கா... ஆயிரம் பொன்னாச்சே!!!




கைப்பேசியை(யும்) அணைத்தாயிற்று
பதினோராம் கோளொன்றில்
பாய் போட்டமர்ந்துவிட்ட தனிமை - இந்த
கவிதைக்காக.

ரசனையான புணர்தலை சாப்பிட்டு
கற்பழிப்பின் வலியை துப்புகிறது
போட்டிபோட்டு எழுதும் இயல்பிலாக் கவிதை.

சட்டென்று காலியாக்கப் பட்டிருக்கிறது
எப்போதும் நிறைந்திருக்கும் அட்சயக் குடமொன்று.

கசிந்து கொண்டேயிருக்கிறது வெறுமை
காகிதம் முழுதும்.
எந்த வார்த்தை எடுத்தடைக்க?  - என்ற யோசனையில்
மூழ்கிப் போய்விட்டேன் நான்.

எப்போதும் கொஞ்சி கிடந்த என் மொழி
கெஞ்சிய பின்னும் பாராமுகம் காட்டுகிறது
அப்படியே அவளை போல!

சிந்தனை தூண்டிலில்
செருகப்பட்டிருக்கிறது  காலப்புழுக்கள்.
நாள் முழுதும் காத்திருந்தும் 
காலிக் கூடையுடன்தான் திரும்புகிறேன் வீட்டிற்கு.

ஒரு நினைவின் மூலத்தை 
திருடிக் கொண்டோடிய மற்றொன்று
உலர்ந்தே போய்விட்டது
அடுத்து வந்த சூன்ய கணத்தின் சூட்டில்!

காலமும் மூளையும்
வெடிப்புகளிட்டு வானம் பார்க்க,
பேனா மையும் வரண்டுவிட்டது...
எதுவும் எழுதாமலே.

எப்போதும் எழுதித் தீர்க்கும்
எல்லாக் கருவையும் கலைத்துப் போட்டு
அவள் நினைவுகளில் கூட,
ஆசுவாசிக்க அமராமல்...
பரிசுத்தொகை பதினைந்து நூறுகளில்
முட்டி மோதி மூர்ச்சையாகிப் போனதென் முயற்சி !!!


(உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் உரையாடல் கவிதைப் போட்டிக்காக)

21 comments:

  1. //எப்போதும் கொஞ்சி கிடந்த என் மொழி
    கெஞ்சிய பின்னும் பாராமுகம் காட்டுகிறது
    அப்படியே அவளை போல! //

    நான் ரசித்த வரிகள் இவை.அசத்தறீங்க.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  2. //செருகப்பட்டிருகிறது காலப்புளுக்கள் .//
    spelling mistake??

    beautiful poem. best of luck.

    -vidhya

    ReplyDelete
  3. நன்றாயிருக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அட்டகாசம்

    பரிசு பெற வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  5. கவிதைப் போட்டிக்கு எழுதுவதே கவிதையாக.. நல்லாருக்கு நண்பரே. வெற்றிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அடிச்சு ஆடுஙக நண்பா

    வாழ்த்துகள்

    ReplyDelete
  7. கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க, வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. @ பூங்குன்றன்.வே

    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா!

    @விதுஷ்

    கவனக் குறைவால் ஏற்பட்ட பிழை!

    மன்னிக்கவும்.

    திருத்தத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  9. @ வானம்பாடிகள்
    @ கவிதை(கள்

    நீங்கள் எல்லாம் கொடுக்கும் உற்சாகம்தான் நான் தைரியமாய் எழுதவே காரணம்.

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  10. @ நேசமித்ரன்

    வாழ்த்துக்களுக்கு நன்றி நேசன் !!!

    (ஐய்ய்யா! பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வாழ்த்துறாங்க ...

    போக போக உண்மையிலேயே நல்ல எழுத அரன்பிசுருவேன் போலயே)

    @ யாத்ரா

    வாழ்த்துக்களுக்கு நன்றி !!!

    ReplyDelete
  11. பரிசுக்கான
    பரிசீலனையில்
    பரிச்சயப்பட்ட என்
    முகமுடியணிந்த பேனா
    அகம் திறந்து
    என்னுடன் புணர்ந்து
    புனைந்த கவிதை...


    வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  12. நல்ல இருக்கு கவிதை வாழத்துக்கள்

    ReplyDelete
  13. //சிந்தனை தூண்டிலில்
    செருகப்பட்டிருக்கிறது காலப்புழுக்கள்.
    நாள் முழுதும் காத்திருந்தும்
    காலிக் கூடையுடன்தான் திரும்புகிறேன் வீட்டிற்கு.//
    அருமை தாமோதரன்
    வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பா கண்டிப்பா ஜெய்ப்பீங்க

    கவிதை எழுதுறவங்களோட உணர்வோட அருமை வார்த்தகள் புதுமையா ...சூப்பர்ப்...

    ReplyDelete
  16. வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. சூன்ய கணத்தின் சூட்டில் தான் சூரியன் கூட கருகும்..
    நன்று.
    வாழ்த்துக்கள்.
    பத்மா

    ReplyDelete
  18. nalla kavithai endru otrai varthaiyil mudikka iyalathu

    ReplyDelete
  19. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  20. உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
    http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html

    ReplyDelete