Wednesday, 1 September 2010

கடைசி துளிகள்!



தூக்கி எறியப்பட்ட
குளிர்பான பாட்டிலின் 
கடைசி துளிகளாய்,
புறக்கணிக்கப்பட்டிருக்கிறது 
காதல்!

பின்னொரு நாள்,

பாலைவனப்புதையல்
தேடும் பயணத்தில்...
தினசரி கனவுகளை
ஆக்கிரமிக்க
தொடங்கி இருக்கின்றன 
அந்த துளிகள்!

Tuesday, 6 July 2010

எனக்கான மந்திர சாவி!


யாரோ தொலைத்த 
சாவியோன்று...
என் காலடியில்!

கள்ளச்சாவிகளின் புழக்கத்தில்,
மாற்றுசாவிகளுக்கு
பழக்க பட்டிருக்கின்றன,
பூட்டப் பட்ட மனங்கள்!

சில 
மந்திர சாவிகளின்
வரவுக்காக,
தாமே பூட்டிக்கிடக்கின்றன,
தனிமைப்பட்ட மனங்கள்!

யாரிடம் சென்று சேர்க்க ?
என்றறியா
தவிப்போடு,
மறந்தே போனேன்...
நான் தொலைத்த,
சாவி ஒன்றை!